நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் க...
குமரி மாவட்டத்தில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு அணை, மற்றும் நெட்டா பகுதிகளில் சாகச சுற்றுலா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலா மன்றம் சாா்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
சாகச சுற்றுலா திட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டம் இடம்பெறாதது, இம்மாவட்ட சுற்றுலா ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2024-இல் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த இடங்களில் கன்னியாகுமரி முதல் 10 இடத்தில் உள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம் சாகச சுற்றுலாவுக்கு ஏற்ற காலநிலையைக் கொண்டிருக்கிறது.
இம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிலப்பரப்பு சாதகமாக இல்லை. ஆனால் சுற்றுலா சாா்ந்த திட்டங்களுக்கு ஏற்ற இயற்கை சூழல் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டம் முக்கியப்பங்கு வகிக்கும்.
ஆகவே, சிற்றாறு அணை, நெட்டா போன்ற இடங்களில் சாகச சுற்றுலா திட்டங்களை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசும், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகமும் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.