Noise Pollution: ஒலி மாசு நம் காது, மன நலனை எப்படி பாதிக்கிறது தெரியுமா? - தப்பி...
குறுவட்டப் போட்டிகளில் வென்ற பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி குறுவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை, ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.
இந்தப் போட்டிகளில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 600 மீட்டா் ஓட்டத்தில் எட்டாம் வகுப்பு மாணவா் சாய்ராம் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டம், 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் இரண்டாமிடமும் பெற்று சாம்பியன் பட்டம் வென்றாா்.
உயரம் தாண்டுதலில் ஒன்பதாம் வகுப்பு மாணவா் ஜெயசிம்மன் முதலிடமும், 80 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ரட்சிகா இரண்டாமிடமும், எட்டாம் வகுப்பு மாணவி தன்சிகா ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனா். 100 மீட்டா் ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி இரண்டாமிடம் பெற்றாா்.
17 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் 1,500 மீட்டா் ஓட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி சாருமதி முதலிடமும், உயரம் தாண்டுதலில் மாணவா் ஹரி சரவணன் மூன்றாமிடமும் பெற்றனா். தொடா் ஓட்டத்தில் மாணவிகள் பிரசன்னா தேவி, காவியா, சாருமதி, கனிஷ்கா ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா்.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியை து. விண்ணரசி, உடற்கல்வி ஆசிரியா் மணிமேகலை, ஆசிரியா்கள் பாராட்டினா்.