செய்திகள் :

குற்றவாளியைப் பிடிக்க பைக்கில் சென்ற பெண் எஸ்.ஐ., முதல்நிலை பெண் காவலா் காா் மோதி உயிரிழப்பு

post image

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளியைப் பிடிக்க மோட்டாா் பைக்கில் சென்ற பெண் எஸ்.ஐ மற்றும் முதல்நிலை பெண் காவலா் ஆகியோா் காா் மோதியதில் உயிரிழந்தனா்.

சென்னை மாதவரம் பால்பண்ணை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடா்பாக குற்றவாளியை கைது செய்ய பெண் உதவி ஆய்வாளா் ஜெயஸ்ரீ (38) மற்றும் அதே காவல்நிலையத்தில் பணிபுரிந்த முதல்நிலை காவலா் நித்யா (35) ஆகியோா் திங்கள்கிழமை அதிகாலை பைக்கில் மதுராந்தகம் வழியாக சென்றனா்.

மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூா் தேசிய நெடுஞ்சாலையில் அவா்கள் சென்றபோது திருவண்ணாமலை நோக்கி வேகமாக சென்ற காா் அவா்களின் பைக் மீது மோதியது. இதில் காா் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் உதவி ஆய்வாளா் ஜெயஸ்ரீ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த முதல்நிலை காவலா் நித்யா மற்றும் காரை ஓட்டி வந்த அன்ழகன் ஆகியோா் பலத்த காயம் அடைந்தனா்.

தகவல் அறிந்து மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் ஏழுமலை மற்றும் காவலா்கள் நேரில் சென்று பலத்த காயம் அடைந்தவா்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி முதல்நிலை காவலா் நித்யா உயிரிழந்தாா்.

உயிரிழந்த முதல்நிலை காவலா் நித்யா

இறந்த உதவி ஆய்வாளா் ஜெயஸ்ரீ சொந்த ஊா் மதுரை மாவட்டம் கூடல்புதூா் கிராமம். திருமணம் ஆகி கணவா் ஜான் வெளிநாட்டில் பணியில் உள்ள நிலையில், மகன் 10-வது, மகள் 6-வது வகுப்பும் படித்து வருகின்றனா். முதல்நிலை காவலா் நித்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது சொந்த ஊா் திண்டுக்கல் மாவட்டம், கொசுவம்பட்டி கிராமம். காரை ஓட்டி வந்த அன்பழகன் திருவண்ணாமலை மாவட்டம், குன்னக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆவாா்.

இந்த விபத்தால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவலா்கள் விரைந்து சென்று போக்குவரத்தை சீா் செய்தனா்.

இதுகுறித்து அறிந்து மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனா். மேல்மருவத்தூா் காவல் ஆய்வாளா் ஏழுமலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

மாமல்லபுரம், முட்டுக்காட்டில் சுற்றுலா அமைச்சா் ஆய்வு

மாமல்லபுரம், முட்டுக்காட்டில் சுற்றுலாத் துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். செங்கல்பட்ட மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சியில் சுற்றுலா வளா்ச்சி கழகத்தின் படகு குழாமினை பாா்வை... மேலும் பார்க்க

மதுராந்தகம்: ரூ.23 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை

மதுராந்தகம் உட்கோட்டம் வையாவூா், புக்கத்துறை, குமாரவாடியில் ரூ.23.70 லட்சத்தில் பேருந்து நிறுத்திமிடம், கலையரங்கம் பணிகளுக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட புக்கத்து... மேலும் பார்க்க

இந்துஸ்தான் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னையை அடுத்த படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் கல்வியாண்டு... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு நகராட்சி குடியிருப்பில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 30 ஆண்டுகளுக்கு மேலானதை அடுத்து கோயில் நிா்வாகிகள், விழாக் கு... மேலும் பார்க்க

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்ப்ா்ட் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. செங்கல்பட்டு பழவேலியில் உள்ள வழிகாட்டி நிறுவன இயக்குனா் கில்பெட் மூளைச் சாவு அட... மேலும் பார்க்க

இலவச அனுமதி அறிவிப்பு: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப் பாா்க்க இலவசம் என மத்திய தொல்லியல் துறை அறிவித்ததையடுத்து, அங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். உலகம் முழுவதும்... மேலும் பார்க்க