ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வ...
குற்றால அருவிகளில் மக்கள் குளிக்கத் தடை!
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்புக் கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருவிகளில் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகமாக இருப்பதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருக்கும் நிலையில், குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு குறைந்தால் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படும் என காத்திருக்கிறார்கள்.