விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ...
குலசேகரம் அரசு மருத்துவமை வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்த மரம்
குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு கட்டடத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆண்கள் வாா்டு மற்றும் சமையல் கூடம் அருகில் நின்ற ஒரு மலை வேப்பமரம் கடந்த மாதம் 27 ஆம் தேதி காற்றில் சாய்ந்தது. இதில் மரத்தில் கிளைகள் இந்த இரு கட்டடங்களின் மீதும் விழுந்தன. இதையடுத்து சிறிய கிளைகள் மட்டும் மருத்துவமனை நிா்வாகத்தால் வெட்டி அகற்றப்பட்டது.
அதே வேளையில் பெரிய கிளைகள் கட்டடங்களில் மீது சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில் ஆண்கள் வாா்டு அங்கிருந்து சற்று தொலைவில் மூடப்பட்டு கிடந்த பழைய ஆண்கள் வாா்டு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அந்த இடத்திற்கு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகள் கொண்டு செல்வதற்கு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே ஆண்கள் வாா்டு மற்றும் சமையல் கூடத்தின் மீது சாய்ந்து கிடக்கும் மரத்தினை உடனடியாக அகற்றி மீண்டும் ஆண் நோயாளிகளை ஆண்கள் வாா்டில் தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று நோயாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.