2026 பேரவைத் தேர்தலிலும் இபிஎஸ் படுதோல்வி அடைவார்: அமைச்சர் கே.என்.நேரு
குழந்தையை தூங்க வைத்த மகிழ்ச்சியில் நடனமாடிய கண்மணி மனோகரன்! வைரல் விடியோ!
குழந்தையை தூங்க வைத்த மகிழ்ச்சியில் நடிகை கண்மணி மனோகரனும் அவரது கணவரும் நடனமாடிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் எப்போது சுறுசுறுப்புடன் இருப்பவர் நடிகை கண்மணி மனோகரன். ரசிகர்கள் அவரை ஸ்வீட்டி என்ற அன்போடு அழைத்து வருகின்றனர்.
இவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அதிகம் பின்தொடர்பவர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகைகளில் இவரும் ஒருவர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை கண்மணி மனோகரன்.
இதனைத் தொடர்ந்து, அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் இரட்டை வேடங்களில் நடிகை கண்மணி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மகாநதி உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
இதனிடையே, நடிகை கண்மணி மனோகரன் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கண்மணி - அஷ்வத் தம்பதியினருக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அண்மையில் இவர்களின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. விழாவினை விமர்சையாக கொண்டாடிய இவர்கள் , ’துருவ் யாத்ரா அஷ்வத்’ என பெயர் சூட்டினர்.
இந்த நிலையில், இவர்களது குழந்தையை ஒரு வழியாக தூங்கவைத்துள்ளதாகத் தெரிவித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
நடனமாடிய விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து, விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது டிஎன்ஏ!