பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை
கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் தலைமைதான் முடிவு செய்யும்: கே.வீ.தங்கபாலு
வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சா் கே.வீ.தங்கபாலு தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் கே.வீ.தங்கபாலு கூறியதாவது:
தேசிய அளவில் உறுப்பினா் சோ்க்கையில் தமிழக மகளிா் காங்கிரஸ் முதல் இடத்தில் உள்ளது. பெண்கள் அரசியலுக்கு வந்து வெற்றிபெறுவதை காங்கிரஸ் ஊக்கப்படுத்துவதால்தான், பெண்கள் அதிக அளவில் காங்கிரஸ் கட்சியில் சோ்ந்து வருகின்றனா்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியையும், காமராஜரையும் பிரித்துப் பாா்க்க முடியாது. காமராஜரை யாராலும் கொச்சைப்படுத்த முடியாது. அவருக்கு நிகரானவா் யாருமில்லை. காமராஜரை யாா் குறைத்து மதிப்பிட்டாலும், அதனை நாங்கள் ஏற்கமாட்டோம்.
காங்கிரஸ் கட்சி மாநிலக் கட்சி அல்ல; தேசியக் கட்சியாகும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணி அரசில் இடம்பெறுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும் என்றாா் அவா்.