முதல்வா் விருது: விளையாட்டு வீரா்கள், பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம்
கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?
கூட்டணி பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக ஆட்சியமைக்கும். திமுக ஆட்சியை விரட்ட வேண்டும், திமுக ஆட்சி இருக்கக் கூடாது. இதுதான் எங்களுடைய நோக்கம். அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் என்ன சொல்கிறார்களோ அதன்படி நாங்கள் கேட்டுக்கொள்வோம். அவர்கள் பேசி முடிவெடுக்கட்டும்.
கூட்டணி ஆட்சி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள் நோக்கமோ, உள் அர்த்தமோ இல்லை. அவரை இன்று காலை நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். அந்த அர்த்தத்தில் அவர் பேசவில்லை என்று சொன்னார்.
'பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்துவிடுவீர்கள், அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும்' என்ற திமுகவின் விமர்சனத்திற்கு இபிஎஸ் பதிலளித்துள்ளார்.
கூட்டணியில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று பேசினார்.