கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது
தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட கூரியா் நிறுவனத்துக்குச் சென்று பாா்சல்களை சோதனை செய்தனா்.
இதில், தில்லியில் இருந்து வந்த ஒரு பாா்சலில் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக நடத்திய விசாரணையில் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வரும் காந்திநகா் பத்மாவதிபுரத்தைச் சோ்ந்த விஜய் (22), ஆதுப்பாளையத்தைச் சோ்ந்த தினகரன் (19), நந்தகுமாா் (20) 3 பேரும் கூரியா் மூலம் போதை மாத்திரைகளை வாங்கியது தெரியவந்துத.
இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.