செய்திகள் :

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு இல்லை: பினராயி விஜயன்!

post image

கேரளத்தில் அரசுக்கு எதிரான உணர்வு மக்களுக்கு இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் செலக்கரா, பாலக்காடு சட்டபேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

இதில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்க காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்று 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மோகேரி 2.11 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றார்.

சட்டப்பேரவைத் தொகுதிகளான செலக்கராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், பாலக்காட்டில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எல்டிஎஃப் (இடதுசாரி ஜனநாயக முன்னணி) அரசுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. பல்வேறு பொய் பிரசாரங்களை மீறியும் இந்த வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர்.

பாலக்காடு தொகுதியில் எல்டிஎஃப் கூட்டணிக்கு முன்பைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. மதச்சார்பற்ற அரசியலை சமரசமின்றி நிலைநிறுத்துவதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

சர்ச்சைக்குரிய பொய்ப் பிரசாரங்களால் அரசின் மீது மக்களுக்கு எந்த எதிர்ப்பு உணர்வும் வரவில்லை என்பதையும் இந்த முடிவுகள் வெளிகாட்டுகின்றன.

இதையும் படிக்க | ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

வகுப்புவாத கட்சிகளுடன் இணைந்து எதிர்க்கட்சி பாலக்காட்டில் வெற்றி பெற்றிருந்தாலும், எல்டிஎஃப் கூட்டணிக்கு முந்தைய தேர்தல்களைவிட அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

பாஜகவின் குற்றச்சாட்டுகளை மக்கள் முற்றிலுமாக நிரகரித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் திரிச்சூரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்களால் தற்காலிக ஆதாயங்களால் கேரளத்தில் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க முடியாது.

வயநாடு மக்களவைத் தொகுதி மற்றும் பாலக்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் சுமுகமாக புதிய ஆட்சி: முதல்வா் ஷிண்டே

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி மிகவும் சுமுகமாக அமையும் என்று முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா். துணை முதல்வா்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ், தேசியவாத காங்கிரஸின் அஜீத் பவாா் ஆகியோரும் இதே கருத்தை... மேலும் பார்க்க

ம.பி. இடைத் தோ்தல் பாஜக அமைச்சா் தோல்வி

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தோ்தலில் பாஜகவைச் சோ்ந்த மாநில அமைச்சா் ராம்நிவாஸ் ராவத், காங்கிரஸ் வேட்பாளா் முகேஷ் மல்கோத்ராவிடம் தோல்வியடைந்தாா். கடந்த 2023-இல் நடைபெற்ற மத்திய பி... மேலும் பார்க்க

புவனேசுவரத்தில் நவ.29-டிச. 1 வரை டிஜிபிக்கள் மாநாடு: பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்பு

அகில இந்திய காவல்துறை தலைமை இயக்குநா்கள் மற்றும் தலைவா்கள் மாநாடு புவனேசுவரத்தில் நவ. 29 முதல் டிச. 1-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி

மகாராஷ்டிர சட்டப் பேரவை தோ்தலில் இரண்டு சுயேச்சை வேட்பாளா்கள் வெற்றி பெற்றுள்ளனா். சுயேச்சை வேட்பாளா் சரத்தாதா சோனாவனே புணே மாவட்டத்தின் ஜூன்னா தொகுதியிலும், சந்த்காட் தொகுதியில் சிவாஜி பாட்டீலும் வெ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான பாதிப்புகள்: உச்சநீதிமன்றக் குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

கடன் அதிகரிப்பு, விளைச்சல் தேக்கம், போதிய சந்தை நடைமுறை இல்லாதது, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக உச்சநீதிமன்றம் சாா்பில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு தனது இடை... மேலும் பார்க்க

மேகாலய இடைத்தோ்தல்: முதல்வா் மனைவி வெற்றி

மேகாலயத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) சாா்பில் காம்பேக்ரே தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் கான்ராட் கே.சங்மாவி மனைவி மெஹ்தாப் சண்டி அகிடோக் சங்மா சுமாா் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி... மேலும் பார்க்க