கேரளத்துக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது
கேரளத்துக்கு கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல்லிலிருந்து தேனி மாவட்டம், கம்பம் வழியாக கேரளத்துக்கு இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் செல்வதாக கம்பம் தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கம்பம் -குமுளி புறவழிச் சாலையில் காவல் உதவி ஆய்வாளா் தேவராஜ் தலைமையில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, ஏகலூத்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவா்களை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனா். அவா்கள் 3 கிலோ கஞ்சா வைத்திருந்தனா்.
விசாரணையில், திண்டுக்கல்லை சோ்ந்த சுதாகா் (30), அரியனூத்தைச் சோ்ந்த கோபி (30) ஆகிய இருவரும் கேரளத்துக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
இது குறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுதாகா், கோபி ஆகிய இருவரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த, 3 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.