செய்திகள் :

கேரளம்: லாட்டரி சில்லறை வியாபாரிக்கு அடித்த யோகம்; விஷூ பம்பர் பரிசாக ஏழைக்கு கிடைத்த ரூ.12 கோடி!

post image

கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. ஓணம் பண்டிகை, சித்திரை விஷூ, ஆயுதபூஜை உள்ளிட்ட முக்கிய விழாக்காலங்களை முன்னிட்டு அதிக பரிசுகளைக் கொண்ட லாட்டரிகள் விற்பனை செய்வது வழக்கம். சித்திரை விஷூ தினத்தை முன்னிட்டு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான லாட்டரிச்சீட்டு விற்பனை செய்யப்பட்டன. ஒரு டிக்கெட் விலை 300 ரூபாய் வீதம் இந்த முறை அச்சிடப்பட்ட 45 லட்சம் டிக்கெட்டுகளும் முகவர்களுக்கு விற்கப்பட்டுவிட்டதாக லாட்டரித் துறை அறிவித்துள்ளது. இந்த முறை பாலக்காடு மாவட்டம் அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு 42,87,350 டிக்கெட்டுகள் விற்பனையாகின. இந்த நிலையில் விஷூ பம்பர் லாட்டரிக்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. அதில் VB 135452  என்ற எண்கொண்ட லாட்டரிச்சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி சப்-ஆபீஸ் முகவரும், மணப்பள்ளியைச் சேர்ந்தவருமான லாட்டரி வியாபாரி அனிலின் ஏஜென்சியில் இருந்துதான் பரிசுக்குரிய VB 135452 எண் கொண்ட டிக்கெட் விநியோகிக்கப்பட்டது தெரியவந்தது. பம்பர் பரிசுபெற்ற அதிஷ்டசாலி யார் என தேடியபோது கொல்லம் சூரநாடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான பொன்னன் வாங்கிய லாட்டரிச்சீட்டுக்கு அந்த பரிசு கிடைத்திருப்பது தெரியவந்தது. பொன்னனின் மனைவி ராதாமணியம்மாவும், மகன் வினோத் குமாரும் லாட்டரி சில்லறை வியாபாரிகள் ஆவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கேரள விஷூ லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் அரிசாக வென்ற பொன்னன்

பல ​கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று லாட்டரி விற்பனைசெய்து வந்தார் 76 வயதான பொன்னன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வியாபாரத்தை நிறுத்திவிட்டு சிறிய அளவில் பெயிண்டிங் வேலைகளுக்கு வேண்டியதாயிற்று. குடும்பம் பட்டினி நிலைக்கு தள்ளப்படும் என்ற நிலையில் 67 வயதான மனைவி ராதாமணியும் 37 வயதான மகன் வினோத்தும் லாட்டரி விற்பனைக்கு இறங்கினர். ​வினோதிற்கு காலில் செயல் திறன் குறைபாடு உள்ளது. இருந்தபோதிலும் தினமும் 14 கிலோமீட்டர் நடந்துதான் லாட்டரி விற்பனை செய்துவருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு காய்ச்சல் வந்து வீட்டில் நாட்கணக்கில் படுத்திருந்தார் வினோத். காய்ச்சல் குறைந்தபோது வியாபாரம் தொடங்குவதற்காக டிக்கெட் வாங்கி வர பொன்னனை தழவா மணப்பள்ளியிலுள்ள 'அம்மா ஏஜென்சி'க்கு சென்றார். அங்கிருந்து எடுத்த லாட்டரிச்சீட்டுதான் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

ஏழை பொன்னனுக்கு ரூ.12 கோடி லாட்டரி பரிசு

அதிஷ்ட எண்ணான 2-இல் முடியும் லாட்டரியை பொன்னன் வழக்கமாக வாங்குவதுண்டு. ஏஜென்சியில் இருந்து மகனுக்கு விற்பதற்கான டிக்கெட்டுகளை எடுத்த கூட்டத்தில் வி.பி 135452 (VB 135452) என்ற டிக்கெட்டை தனக்காக வாங்கினார் பொன்னன். நேற்று லாட்டரி குலுக்கல் முடிவு வந்தபோது மேஜையில் இருந்து டிக்கெட்டை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தார். அவரது டிக்கெட்டிற்கு முதல் பரிசு விழுந்தது தெரியவந்தது. இதுபற்றி பொன்னன் கூறுகையில், "இதற்கு முன்பு 2-ம் எண்ணில் முடியும் டிக்கெட்டுகளை வாங்கிய சமயத்தில் 2,000 ரூபாய், 5,000 ரூபாய் வரை பரிசுகள் கிடைத்துள்ளன. கடைசி ஒரு இலக்கம் மாறி தினசரி லாட்டரியின் முதல் பரிசு கைநழுவிப் போன நிகழ்வுகளும் நடந்து உள்ளது.​ மகனுக்கு திருமணம் நடத்த வேண்டும். அவனுக்கு லாட்டரி விற்பனை செய்ய ஒரு மூன்று சக்கர வாகனத்திற்காக பஞ்சாயத்தில் விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. அதை வாங்க வேண்டும். கொஞ்சம் கடன் இருப்பதையும் தீர்க்க வேண்டும்" என்றார் கேரளத்தில் ஏழை குடும்பத்துக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பம்பர் பரிசு கிடைத்திருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது.

’மின்வெட்டு ஏற்படுவதற்கு திமுகவே காரணம்’ – அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மேட்டூர் அணையை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைக்குறைவாக இருக்கிறது. தண்ணீர் ... மேலும் பார்க்க

மநீம: `தேர்தல் முடிவுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பழிகளைச் சுமத்திச் செல்கின்றனர்' - முரளி அப்பாஸ்

மக்கள் நீதி மய்யத்திலிருந்து சில மாநில நிர்வாகிகள் விலகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது அவர், “தமிழகத்தில் தற்போது கட்ச... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில் விவகாரம்: `இரண்டு நாள்களில் நானே நேரில் சொல்கிறேன்' - நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!

கர்நாடகா தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ளது தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயில். "இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1995-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்... மேலும் பார்க்க

`தவெக அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால், வீதியில் இறங்கிப் போராடுவோம்!' - சி.பி.எம் பேபி

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை உறுதி செ... மேலும் பார்க்க

'அமெரிக்கா தான் இந்தியாவை ரஷ்ய எண்ணெயை வாங்க சொன்னது; இங்கே நடிக்க வேண்டாம்'- ஜெய்சங்கர் 'நச்' பதில்

தற்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பின்லாந்து பயணத்தில் இருக்கிறார். பின்லாந்தில் நடந்த குழு விவாதத்தில் பத்திரிகையாளர் ஒருவர் ஜெய்சங்கரிடம், 'இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக பரிவு காட்டுக... மேலும் பார்க்க