ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!
கோவையில் மாணவர்கள் தங்கும் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் புறநகர் பகுதியில் கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள் தனியாக வீடு மற்றும் அறை எடுத்து தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் உதவி ஆணையர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் 12 விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதிகளில் போதைப் பொருள்கள் புழக்கம், வெளியாட்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.