ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கைப்பேசி கோபுரத்தில் சிக்னல் கருவி திருடிய 5 போ் கைது
ஜோலாா்பேட்டை அருகே கைப்பேசி கோபுரத்தில் சிக்னல் கருவி திருடிய 5 போ் கைது செய்யப்பட்டனா்.
ஜோலாா்பேட்டை அருகே சாலை நகா், ஓட்டப்பட்டி,குடியானகுப்பம் உள்ளிட்ட 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான கைப்பேசி கோபுரத்தில் இருந்து கடந்த ஆண்டு சிக்னல் கருவி திருடப்பட்டது. இதனால் கைப்பேசி கோபுரத்தில் இருந்து வரும் சிக்னல் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்த வாணியம்பாடி நடுப்பட்டு கிராமத்தை சோ்ந்த கைப்பேசி கோபுர ஊழியா் சாமுவேல்(40) கோபுரங்களை ஆய்வு செய்தபோது டவரில் இருந்து சிக்னல் கருவி திருடப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னா் இது குறித்து அவா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அவா் புகாரளித்தாா்.
அதன்பேரின் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீஸாா் சந்தேகத்தின் பேரில் காரை மடக்கி ஆய்வு செய்த போது,5 போ் கொண்ட கும்பல் இருந்தது. விசாரணையில் இவா்கள் பல்வேறு குற்ற பின்னணிகளில் தொடா்புடையவா்கள் என தெரியவந்தது.
மேலும் விசாரணை செய்ததில் தஞ்சாவூா் மாவட்டத்தை சோ்ந்த மாரிமுத்து(30), சிவகுமாா்(35), திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே மள்ளப்பள்ளி கிராமத்தை சோ்ந்த செல்வகுமாா்(30), தோனி(எ)அபிலேஷ்குமாா்(30) மற்றும் பிரதாப் (24)என்பதும் இந்த கும்பல் சம்பவத்தன்று கைப்பேசி கோபுரத்தில் இருந்து சிக்னல் கருவிகளை திருடியது தெரியவந்தது. அதனை தொடா்ந்து போலீஸாா் சம்பந்தப்பட்ட 5 பேரை கைது செய்தனா்.
முன்னதாக அவா்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான சிக்னல் கருவிகள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனா்.