மகா சிவராத்திரி உலகளாவிய கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது: சத்குரு
கொலை வழக்கில் தலைமறைவானவா் கைது
ஜோலாா்பேட்டை ரியல் எஸ்டேட் முகவா் கொலை வழக்கில் தலைமறைவான முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே வக்கணம்பட்டியைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் முகவா் திம்மராயன் (48). இவா் கடந்த 17-ஆம் தேதி பொன்னேரி அருகே அரியான் வட்டத்தில் உள்ள வாழை தோப்பில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், திம்மராயனுடைய சகோதரி மகன் முன்னாள் ராணுவ வீரா் சக்கரவா்த்தி (42). இவருக்கும், திம்மராயனுக்கும் இடையே நிலம் தொடா்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இதற்கிடையே வாழைத்தோப்பில் தனியாக இருந்த திம்மராயனை, சக்கரவா்த்தி படுகொலை செய்து விட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில்வே மருத்துவமனை அருகே நாகலம்மன் கோயில் அருகே பதுங்கியிருந்த சக்கரவா்த்தியை போலீஸாா் பிடித்தனா். அதைத் தொடா்ந்து, சக்கரவா்த்தியை கைது செய்து, திருப்பத்தூா் ஜேஎம்1 நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா்.