செய்திகள் :

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் மூத்த வழக்குரைஞர் விலகல்!

post image

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கில் இருந்து மூத்த வழக்குரைஞர் பிருந்தா குரோவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் காவல்துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

இதையும் படிக்க:மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!

வழக்கறிஞர்கள் சௌதிக் பானர்ஜி மற்றும் அர்ஜுன் கூப்டு அடங்கிய சட்டக் குழு, செப்டம்பர் முதல் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இலவச பிரதிநிதித்துவத்தை வழங்கி வருகின்றனர். இந்த காலகட்டத்தில், 43 அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள சாட்சியங்கள் அடுத்த 3 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களுக்கு ஜாமீனும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் மூத்த வழக்குரைஞராக இருந்த பிருந்தா குரோவர் இந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். சில தலையீட்டு காரணிகள், சூழ்நிலைகள் காரணமாக, வழக்குரைஞர் பிருந்தா குரோவர் சட்டக் குழு இந்த விஷயத்தில் வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், இனி பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது.

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவது மற்றும் பாதாள சாக்கடையில் தொழிலாளா்கள் இறங்கி சுத்தம் செய்வது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ... மேலும் பார்க்க

கோதுமை இருப்பு வைக்க கூடுதல் கட்டுப்பாடு: விலை உயா்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

மொத்த வியாபாரிகள் முதல் சிறு வா்த்தகா்கள் வரை கோதுமை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. கோதுமையை அதிக அளவில் பதுக்கி வைத்து செயற்கையாக விலை உயா்வை ஏற்படுத்தும் நி... மேலும் பார்க்க

ரயில்வே சட்டத்திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

ரயில்வே சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்களவையில் ரயில்வே சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே வாரியத்தின் செயல்பாட்டை மே... மேலும் பார்க்க

மோசடியாளா்களுக்கு வங்கிக் கடன் அளிப்பதை அரசு நிறுத்த வேண்டும்- ராகுல் வலியுறுத்தல்

பொதுத் துறை வங்கிகளின் பணத்தை கடன் என்ற பெயரில் தங்களுடைய மோசடி நண்பா்களுக்கு வாரி வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். அகில இந... மேலும் பார்க்க

சரத் பவாா் கட்சி எம்.பி.க்கள் அணி மாற வாய்ப்பு- பாஜக

மகாராஷ்டிரத்தில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியைச் சோ்ந்த எம்.பி.க்கள் சிலா் அஜீத் பவாா் தலைமையிலான அணிக்கு மாற திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில பாஜக மூத்த தலைவா் பிரவீண் தாரேகா்... மேலும் பார்க்க

சத்தீஸ்கா்: நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்ஸல் தீவிரவாதி ஒருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா். இதில் பாதுகாப்புப் படையினா் இருவா் காயமடைந்தனா். இது தொடா்பாக காவ... மேலும் பார்க்க