செய்திகள் :

கோடியக்கரையில் உள்வாங்கிய கடல்!

post image

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடல் சனிக்கிழமை மாலை திடீரென உள்வாங்கி குளம்போல் அமைதியாகக் காணப்பட்டது.

வங்கக் கடலில் கடந்த வாரத்தில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழைப் பொழிவு நீடித்தது.

இதனிடையே, தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது வலுப்பெற்று ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவும், தமிழகத்தில் மீண்டும் மழை தொடரவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.

விவசாயிகளை பாகிஸ்தானிலிருந்து நுழைந்தவர்களைப் போல நடத்துவதா? காங். கேள்வி

இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வடக்கு திசையில் இருந்து கடலை நோக்கி தரைக்காற்று சற்று பலமாக வீசியது.

இதனால் மாலையில், கோடியக்கரை கடல் பரப்பு உள்வாங்கி, தரைப்பகுதியில் அமைந்த நீர்நிலைகளைப் போல அலைகள் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.

வட சென்னை வளா்ச்சி திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்: அமைச்சா் சேகா்பாபு தகவல்

வட சென்னை வளா்ச்சி திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான ... மேலும் பார்க்க

திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் வரும் 18-ஆம்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி சட்டவ... மேலும் பார்க்க

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன்: பிரேமலதா

விஜயகாந்த் போல எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர் ஈவிகேஸ் இளங்கோவன் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்த தேமுதி... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரத்தில் மழை நீர் வடிகால் வாய்க்காலில் மூழ்கி குழந்தை பலி

சேதுபாவாசத்திரத்தில் வீட்டு வாசலில் சென்ற மழைநீர் வடிகால் வாய்க்கால் நீரில் மூழ்கி குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேதுபாவாசத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வசிப்பவர் மீனவர் வினோத்... மேலும் பார்க்க

கனமழை: தூத்துக்குடியிலிருந்து புறப்படும் ரயில் சேவைகளில் மாற்றம்!

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளப் பாதைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியிருப்பதல் அங்கிருந்து இன்று புறப்படும் முக்கிய ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்திருந்து புறப்படுமென்று ரயில்வே நிர்வாகம் த... மேலும் பார்க்க