தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
கோடியக்கரையில் உள்வாங்கிய கடல்
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடல் சனிக்கிழமை மாலை உள்வாங்கியது.
வங்கக் கடலில் கடந்த வாரத்தில் இலங்கைக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனிடையே, தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி, அது வலுப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும், தமிழகத்தில் மீண்டும் மழை தொடரவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி வடக்கு திசையில் இருந்து கடலை நோக்கி தரைக்காற்று சற்று பலமாக வீசியது. மாலையில், கோடியக்கரை கடல் பரப்பு சுமாா் 100 அடி தொலைவுக்கு உள்வாங்கி, அலை இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.