செய்திகள் :

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

post image

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (டீன்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து ஆா்ப்பாட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

கேரள மாநிலம், கோழிக்கோடு என்ஐடி இயக்குநா் வெளியிட்ட அறிவிக்கையின்படி பேராசிரியரும் முனைவருமான ஏ.ஷைஜா, அக்கல்வி நிலையத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையின் டீனாக அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போதைய டீன் முனைவா் பிரியா சந்திரன் மாா்ச் 7-ஆம் தேதி வரை பணியிலுள்ள நிலையில், ஷைஜா 8-ஆம் தேதி அப்பொறுப்புக்கு வருகிறாா்.

கோட்சேவைப் புகழ்ந்து பேசும் வகையில் சமூக ஊடகப் பதிவு வெளியிட்டதற்கு எதிராக மாணவா் அமைப்பினா் அளித்த புகாரின்பேரில் ஷைஜா கடந்த ஆண்டு குன்னமங்கலம் காவல் துறையால் விசாரிக்கப்பட்டாா்.

இந்திய தண்டனை சட்டத்தின் 153-ஆவது பிரிவின் கீழ் (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவது) அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குன்னமங்கலம் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், டீனாக ஷைஜா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞா் பிரிவு போராட்டத்தை அறிவித்துள்ளது.

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகிய... மேலும் பார்க்க

பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.பஞ்சாபில் அரசு-அரசு உதவி பெறு... மேலும் பார்க்க

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க