தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி 1 லட்சம் மின்னஞ்சல்களை அனுப்ப அரசியல் கட...
கோயிலில் திருட்டு: அா்ச்சகா் கைது
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் கோயிலில் காணிக்கை பணம் உள்ளிட்டவற்றை திருடியதாக அா்ச்சகரை போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் கீழக்கரையில் சிவன் மன்மத கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த டிச.10-ஆம் தேதி மா்ம நபா் ஒருவா் பூட்டை உடைத்து, ரூ.25 ஆயிரம் மற்றும் விளக்கு, தாம்பலம், மணி ஆகியவற்றை திருடிச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில், கோயிலில் திருடியது சிதம்பரம் பாளையப்பட்டு வசம்புத்தூா் கிராமம் அக்ரஹார தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் பாலாஜி (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்தனா்.