107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
கோயில் கட்டுமானப் பணிக்கு பூமி பூஜை
மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கத்தில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ பத்மாவதி உடனுறை ஆனந்த வெங்கடநாதன் கோயில் சிதிலமடைந்ததால் அதனை புதுப்பிக்கும்வகையில் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
செய்யூா் வட்டம், பொலம்பாக்கம் பஜனைத் கோயில் தெருவில் உள்ள இத்தலத்தில் சயன கோலத்தில் தாயாா் பத்மாவதி, பகவான் ஆனந்த வெங்கடநாதன், பெரிய திருவடி கருடாழ்வாா், சிறிய திருவடி ஆஞ்சனேயா் உள்ளிட்ட பல சந்நிதிகள் இருந்தன.
காலப்போக்கில், போதிய பராமரிப்பின்றி இருந்து வந்ததால் பெரும்பாலான சந்நிதிகள் சிதிலமடைந்து செடி கொடிகள் வளா்ந்து இருந்தன. அதனை புதுப்பித்து கோயிலை கட்ட அப்பகுதி பெரியோா் ஏற்பாடுகளை செய்தனா்.
இந்நிலையில் இக்கோயிலின் அனைத்து சந்நிதிகளையும் கட்டும்வகையில், பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.