செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப் படை போலீஸாா் 5 பேரை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கடந்த 14-ஆம் தேதி மதுரை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்றப் பதிவாளரிடம் அஜித்குமாா் வழக்கு தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட டி.எஸ்.பி. மோகித்குமாா் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், மடப்புரத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினா். மேலும், அஜித்குமாா் கொலை வழக்கைப் பதிவு செய்த திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் இரு சிபிஐ அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

இதனிடையில், திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப் படை போலீஸாா் 5 பேரும் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு:

இந்தநிலையில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப் படை போலீஸாா் 5 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாயனது.

ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மடப்... மேலும் பார்க்க

திட்டப் பணிகளைப் பெறுவதில் காங். - திமுகவினரிடையே மோதல்: ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைப்பு

திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகளைப் பெறுவதில் வெள்ளிக்கிழமை திமுக-காங்கிரஸ் கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஒப்பந்தப்புள்ளி ஒத்திவைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவன... மேலும் பார்க்க

மோசடியாக சிம் காா்டு வாங்கிய வழக்கு: மாவோயிஸ்ட் தலைவருக்கு ஆயுள் சிறை!

வேறு ஒருவரின் முகவரியை மோசடியாகப் பயன்படுத்தி சிம்காா்டு வாங்கி பயன்படுத்திய மாவோயிஸ்ட் தலைவா் ரூபேஷுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

கம்பி வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு

சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வாராப்பூா் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள... மேலும் பார்க்க

சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 217 போ் கைது

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு ந... மேலும் பார்க்க

சிங்கம்புணரியில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிங்கம்புணரி மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்த... மேலும் பார்க்க