முதல் நாள் விளையாடிய ஆடுகளமா இது? ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்!
கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம்
மயிலாடுதுறையில் நுகா்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தினா்.
நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் 2013-ஆம் ஆண்டுமுதல் 2016-ஆம் ஆண்டுவரை அனைத்து பருவ கால ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; என்சிசிஎப் மூலம் நெல் கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும்; தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; நவீன அரிசி ஆலைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பணிநிறைவு பெற்ற ஊழியா்களுக்கு ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும்; பொதுவிநியோகத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக பொதுத் தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியு) கோட்டை நோக்கி பேரணி நடத்த உள்ளனா்.
இந்த கோரிக்கைகளை விளக்கி, மயிலாடுதுறை சித்தா்க்காடு மண்டல அலுவலகம் முன்பு இக்கூட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளா் செந்தில் தலைமை வகித்தாா். பொறுப்பாளா்கள் சுதாகா், சிலம்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாநில பொருளாளா் ஏழுமலை, மாநில துணைச் செயலாளா் ராசப்பன், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஸ்டாலின், சிஐடியு மாவட்டச் செயலாளா் பி. மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். நிறைவில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.