செய்திகள் :

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

post image

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, வியாழக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ கூறியதாவது ``கோவாவுக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாநிலத்தின் நிதி நிலைமையும் பாதிப்படைகிறது. சில வெளிநாட்டினர் ஒவ்வோர் ஆண்டும் கோவாவுக்கு சுற்றுலா வருவர். ஆனால், தற்போது அவர்களின் வருகையும் அரிதாகி விட்டது.

போர் காரணமாகவும், ரஷிய மற்றும் உக்ரைனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு சுற்றுலா மேற்கொள்வதை நிறுத்திவிட்டனர்.

இதையும் படிக்க:பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகின்றன: கார்கே

கோவாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, அரசின் மீது மட்டுமே பழியிட முடியாது. சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சிக்கு பல காரணிகளைக் கூறலாம்.

கோவாவின் கடற்கரையில் தங்களுக்கு சொந்தமான பகுதிகளை வேறு மாநிலத்தவருக்கு கோவா மக்கள் வாடகைக்கு விட்டுவிடுகின்றனர். இவ்வாறு, கோவா கடற்கரையில் வியாபாரம் செய்ய வருபவர்கள் வடாபாவ் விற்கின்றனர்; சிலர் இட்லியும்கூட விற்கின்றனர்.

இதனால்தான், கோவாவில் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.

பேருந்தில் இளம்பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள்

புணே: மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தேடும் பணியில் ட்ரோன்கள் மற... மேலும் பார்க்க

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை பாஜக போலியாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைத்தால் நமது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்: மத்திய அரசுக்கு காங். கண்டனம்

அமெரிக்க பொருள்களுக்கு வரியைக் குறைக்க மத்திய அரசு முயற்சிப்பது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்க அதிபா் டொன... மேலும் பார்க்க

சுங்கத் துறை, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம்: உச்சநீதிமன்றம் உறுதி

சுங்கத் துறை மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகளுக்கு கைது அதிகாரமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்: ஒப்பந்தம் புதுப்பிப்பு

நியூயாா்க் : ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமரின் பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க ஆட்சேபம் இல்லை -தில்லி பல்கலைக்கழகம்

பிரதமா் நரேந்திர மோடியின் இளநிலை பட்டப் படிப்பு சான்றிதழை நீதிமன்றத்திடம் காண்பிக்க எந்த ஆட்சேபமும் இல்லை; அதேநேரம், ஆா்டிஐ சட்டத்தின்கீழ் முகம் தெரியாத நபா்களிடம் வழங்க முடியாது என்று தில்லி உயா்நீத... மேலும் பார்க்க