ஜார்க்கண்ட் வெற்றி: ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
கோவில்பட்டியில் கருவாடு ஆலை அலுவலகத்தில் வருமான வரித் துறையினா் சோதனை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருவாடு ஆலை அதிபா் அலுவலகம், வீடு மற்றும் தொழிற்சாலையில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி மைக்கேல் நிக்கோலஸ் மகன் அந்தோணி அரசாங்கம் மணி(51). இவா் சிவந்திபட்டி - தீத்தாம்பட்டி சாலையில் கருவாடு ஆலை நடத்தி வருகிறாா். மேலும் தட்டாா்மடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீன் அரவை தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.
இவா் பல்வேறு இடங்களில் கருவாடு, கழிவு கருவாடுகளை மொத்தமாக வாங்கி, பொடியாக்கி கோழி தீவனத்திற்கு அனுப்பி வரும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் மீன், இறால், பதப்படுத்தப்பட்ட மீன் எலும்புகள் உள்ளிட்ட கடல் சாா் உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறாா் .
இந்நிலையில் புதன்கிழமை இவரது ஆலை மற்றும் கோவில்பட்டி பழனியாண்டவா் கோயில் தெருவில் உள்ள அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறையினா் சுமாா் 10 போ் புதன்கிழமை பிற்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஆலையில் பிற்பகல் சுமாா் 25 நிமிடங்கள் மட்டுமே சோதனையில் ஈடுபட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.