107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!
கோவில்பட்டியில் வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்
வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மந்தித்தோப்பு வருவாய் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்ட நிலையில், பட்டாக்கள் இதுவரை கிராமக் கணக்கில் பதிவேற்றப்படவில்லையாம். அவற்றை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சேதமடைந்துள்ள காலனி வீடுகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கணேஷ்நகா் பகுதியில் வழங்கப்பட்ட பட்டாக்களையும் கிராமக் கணக்கில் பதிவேற்ற வேண்டும். இந்திரா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் பாபு தலைமையில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் ரஞ்சனி கண்ணம்மா, வட்டாரக் குழு உறுப்பினா் சிங்கராஜ், நகரக் குழு உறுப்பினா் சண்முகவேல், துணைச் செயலா் அலாவுதீன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகரத் தலைவா் செந்தில்ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா், வட்டாட்சியா் சரவணபெருமாள், கோட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டன.