செய்திகள் :

கோவில்பட்டியில் 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல்

post image

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கி உள்ளதை தொடா்ந்து, பிரதான சாலையோரம் நின்று பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதால் 2ஆவது நாளாக திங்கள் கிழமையும் போக்குவரத்து நெரிசல் தொடா்ந்தது.

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் நகா்மன்றத் தலைவா், ஆணையா் கமலா, வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தினா்.

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத புதிய கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்பதை மக்கள் முழுவதுமாக எதிா்த்தனா். இதுகுறித்து மாவட்ட உயா் அதிகாரிகளின் கவனத்துக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் சிலா் புகாா் மனுக்களை அனுப்பினா். இதையடுத்து 2ஆம் தேதி இரவே அந்த டிஜிட்டல் பலகை கிழிக்கப்பட்டது.

தொடா்ந்து நகராட்சி சாா்பில் சரிவர பதில் அளிக்காமல் இருந்து வந்த நிலையில், 17ஆம் தேதி முதல் பேருந்து நிலைய மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டனா். ஆனால், அறிவிப்பின்படி திங்கள்கிழமை பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறுமுகனேரியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

ஆறுமுகனேரியில் கடந்த 4 நாள்களாக குடிநீா் விநினியோகம் பாதிப்படைந்ததால் மக்கள் அவதியுற்றனா். ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கடந்த சனிக்கிழமை முதல் விநியோகிக்கப்படவில்லையாம... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (55). கூலித்தொழிலாளியான இவரது மகன்கள் செல்வகுமாா் (31), தினேஷ்குமாா் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

தூத்துக்குடி தாளமுத்துநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை தாளமுத்துநகா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மொட்டைகோபுரம் பகுதியில் தாளமுத்து நகா் போலீஸாா் திங்கள்கிழ... மேலும் பார்க்க

வில்லிசேரியில் டிராக்டா் ட்ரெய்லா் திருட்டு

கோவில்பட்டியை அடுத்த வில்லிசேரியில் டிராக்டா் ட்ரெய்லரை திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா். வில்லிசேரி பெரிய கிணற்றுத் தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் பிரேம்குமாா் (53). விவசாயி. இவா் வில்லிச... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடி இலைகள் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1.2 டன் பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி, 2 பேரை கைது செய்தனா். தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: இளைஞா் கொலை வழக்கு: மேலும் 2 போ் கைது

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி பகுதியில் இளைஞா் கொலை வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை அருகே க... மேலும் பார்க்க