கோவில்பட்டியில் 4 வாகனங்களில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கோவில்பட்டியில், 4 வாகனங்களிலிருந்து காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிஜா தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பெலிக்ஸன் மாசிலாமணி, அதிகாரிகள் கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத, அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட 2 சிற்றுந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது.
மேலும், அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்த 4 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டதுடன், காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிற்றுந்துகளை உரிய வழித்தடத்தில் இயக்கும்படி ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.