டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!
கோவை: பாலத்தில் இருந்து தவறி விழுந்த கவுன்சிலர் உயிரிழப்பு..! -விசாரிப்பதில் போலீஸாரிடையே குழப்பம்
கோவை மாநகராட்சி 56-வது வார்டு கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் சூலூர் பட்டணம் அருகே தன் நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்றிருந்தார். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக நெசவாளர் காலனி பாலம் அருகே சென்றுள்ளார்.
திடீரென எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 15 அடி பாலத்தில் இருந்து கீழே நொய்யல் ஆற்றங்கரையில் விழுந்தார். அவரின் நண்பர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் கிருஷ்ணமூர்த்தி வருகிற வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சூலூர் மற்றும் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு நடுவே நடைபெற்றது. இதனால் வழக்கை யார் விசாரிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
சூலூர் போலீஸார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி மது அருந்தியது தெரியவந்தது.
வழக்கை யார் விசாரிப்பது என்பதில் சிங்காநல்லூர் மற்றும் சூலூர் போலீஸ் இடையே தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது. இருவருமே தங்களின் காவல்நிலையம் எல்லை இல்லை என கூறினர்.
ஒருகட்டத்தில் சூலூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், வழக்கை சிங்காநல்லூர் காவல்நிலையத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.