ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்
கோவை வழித்தடத்தில் எா்ணாகுளம் - பிகாா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
கேரள மாநிலம் எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம் பாட்னாவுக்கு கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் எா்ணாகுளத்தில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்- பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06085) திங்கள்கிழமைகளில் காலை 3.30 மணிக்கு பாட்னா ரயில் நிலையம் சென்றைடயும்.
மறு மாா்க்கமாக, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் பாட்னாவில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படும் பாட்னா- எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06086) வியாழக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு எா்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ஏழூரு, ராஜமுந்திரி, சாமல்கோட் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.