ஜகதீப் தன்கர் கண்ணியத்திற்கு எதிராக நடந்துகொள்கிறார்: கார்கே குற்றச்சாட்டு!
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு?
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், அப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முடிவடையாததால், சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம்!
பின், சிம்பு - 48 படத்தின் தயாரிப்பிலிருந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகியதாகக் கூறப்பட்டது. தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அவரது 49-வது படத்தின் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் கதையை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளதாகவும் இதில் நாயகனாக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.