செய்திகள் :

சதம் விளாசிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா; இலங்கைக்கு 516 ரன்கள் இலக்கு!

post image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (நவம்பர் 27) டர்பனில் தொடங்கியது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களும், இலங்கை அணி 42 ரன்களும் எடுத்தனர்.

516 ரன்கள் இலக்கு

149 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 17 ரன்களுடனும், கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!

281 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது தென்னாப்பிரிக்க அணி. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். உணவு இடைவேளையின்போது, தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 70 ரன்களுடனும், டெம்பா பவுமா 64 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, இலங்கையைக் காட்டிலும் 382 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதன் பின், தென்னாப்பிரிக்க அணி மீண்டும் அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

இதையும் படிக்க: விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!

இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சதம் விளாசி அசத்தினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 221 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். டெம்பா பவுமா 228 பந்துகளில் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகளை இழந்து 366 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணி இலங்கையைக் காட்டிலும் 515 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி!

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒருநாள் ஜெர்சியை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அறிமுகப்படுத்தி வைத்தார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் இந்திய கிரிக்கெட் கவுன்சில் செய... மேலும் பார்க்க

அதிகம் ஊதியம் பெறும் ரிஷப் பந்த்! பட்டியலில் முதலிடத்தை இழந்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு ஆண்டில் அதிகம் வருவாய் ஈட்டுபவர்கள் வரிசையில் முதலிடத்தை இழந்தார் விராட் கோலி. ஐபிஎல் மெகா ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜெட்டா நகரில் நவ.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற... மேலும் பார்க்க

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து தென்ன்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் வியான் முல்டர் விலகியுள்ளார்.இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை... மேலும் பார்க்க

விராட் கோலியின் சதத்தை தடுக்க தவறிய ஆஸ்திரேலியா; ஆலன் பார்டர் அதிருப்தி!

விராட் கோலியின் சதத்தைத் தடுக்க ஆஸ்திரேலிய அணி தவறிவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 382 ரன்கள் முன்னிலை!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி உணவு இடைவேளையின்போது, 382 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் த... மேலும் பார்க்க

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை; அணியில் 11 பேரும் பந்துவீச்சு!

சையத் முஷ்டாக் அணி தொடரில் மணிப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணி புதிய சாதனை படைத்துள்ளது.மணிப்பூர் - தில்லி அணிகள் மோதிய போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ம... மேலும் பார்க்க