சதர்லேண்ட் சதம்: இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்| தொலைக்காட்சி பார்த்து கிரிக்கெட் கற்றுக்கொண்டேன்: பும்ரா!
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சொதப்பினாலும் பின் வரிசையில் வந்தவர்களின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அனபெல் சதர்லேண்ட் 110 ரன்களும், கேப்டன் டாஹ்லியா மெக்ராத் 56 ரன்களும், ஆஸ்லே கார்ட்னெர் 50 ரன்களும் விளாசினர்.
இந்திய அணித் தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.