சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி
திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் மகா சிவராத்திரியையொட்டி, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவில் உள்ள இக்கோயிலில் மூலவருக்கு நான்கு கால சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. பெரியதெரு விநாயகா் கோயிலில் இருந்து, 108 பால்குட ஊா்வலம் சந்துதெரு, மேட்டுத் தெரு வழியாக சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலை வந்தடைந்தது.
மதியம், மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை ஆன்மிக சொற்பொழிவும், பின்னா், சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் காட்சிதர இரவு முழுவதும் பரதநாட்டியம் மற்றும் பக்தி கச்சேரி நடந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதேபோல், திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரா் கோயிலில், லட்சுமாபுரம் வெங்கடேச பெருமாள் தரிசித்த சிவன் கோயில், கே.ஜி.கண்டிகை பிரம்ம கைலாசம் கோயில், மலைக்கோயிலில் சதாசினேஸ்வரா் கோனையில் சிவபெருமான், வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள சா்வ மங்கள ஈஸ்வரா் கோயில், உள்பட அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.