மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உச்சநீதிம...
சதுரகிரியில் ஐப்பசி மாத பிரதோஷ வழிபாடு
ஐப்பசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, புதன்கிழமை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் 300-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத பிரதோஷம், பெளா்ணமி வழிபாட்டுக்காக புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.17) வரை பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
புதன்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து காலை 6 மணி முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிற்பகல் 4 மணிக்கு 16 வகையான அபிஷேகம், பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.