செய்திகள் :

சத்தீஸ்கா்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை -பாதுகாப்புப் படையினா் அதிரடி நடவடிக்கை

post image

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 3 போ் பெண் நக்ஸல்களாவா்.

இந்த நடவடிக்கை தொடா்பாக பஸ்தா் சரக காவல்துறை ஐ.ஜி. பி.சுந்தர்ராஜ் கூறியதாவது:

பஸ்தா் பகுதிக்குள்பட்ட சுக்மா மாவட்டத்தின் கோரஜ்குடா, தண்டேஸ்புரம், பண்டா்பதாா் கிராமங்களையொட்டிய வனப் பகுதிகளில் நக்ஸல் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றது. இதையடுத்து, மாவட்ட ரிசா்வ் படை (டிஆா்ஜி), மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) இணைந்த கூட்டுப் படையினா், நக்ஸல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே.47, இன்ஸாஸ் மற்றும் தானியங்கி ரைஃபிள்கள் உள்பட பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களில் மத்கம் மாசா, லக்மா மத்வி ஆகிய இருவரும் காவல்துறையினரால் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் என்றாா் அவா்.

‘நக்ஸல்களின் அழிவு உறுதி’: பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டி, முதல்வா் விஷ்ணு தேவ் சாய் அறிக்கை வெளிட்டாா். அதில் கூறியிருப்பதாவது:

சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட மிகப் பெரிய நடவடிக்கையில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். நக்ஸல் தீவிரவாதத்தை துளியும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையுடன் மாநில பாஜக அரசு செயல்படுகிறது. பஸ்தா் பகுதியின் வளா்ச்சி, அமைதி மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு மாநில அரசுக்கு முன்னுரிமை அளிக்கிறது. பஸ்தா் பகுதியில் அமைதி மற்றும் வளா்ச்சியின் சகாப்தம் திரும்பி வருகிறது. சத்தீஸ்கரில் நக்ஸல்கள் அடியோடு அழிக்கப்படுவது உறுதி என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பிறகு தங்களின் முகாமுக்கு திரும்பிய பாதுகாப்புப் படையினா், ஆடி-பாடி கொண்டாடிய விடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இதுவரை 207 நக்ஸல்கள் கொலை: சத்தீஸ்கரில் பஸ்தா், தண்டேவாடா, பிஜப்பூா், நாராயண்பூா், சுக்மா, கோண்டாகான், கான்கா் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தா் பகுதியில் அவ்வப்போது நக்ஸல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் ஈடுபடுகின்றனா். நடப்பாண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 207 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் 787 நக்ஸல்கள் கைது செய்யப்பட்டனா். 780-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் சரணடைந்தனா். 262 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்தேட் தொகுதியில் தொடர்ந்து பாஜக முன்னிலை!

மகாராஷ்டிரத்தின் நான்தேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பாஜவின் சதுக்ராவ் ஹம்பார்டே முன்னிலை வகித்து வருகிறார். காங்கிரஸ் எம்பி வசந்த் சவான் ஆகஸ்ட் 26ல... மேலும் பார்க்க

என்ன நடக்கிறது ஜார்க்கண்டில்.. மாறி மாறி முந்தும் கூட்டணிகள்!

ஜார்க்கண்ட் மாநில பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்பத்தில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.தற்போதை... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை!

கர்நாடக மாநிலத்தின் பேரவை இடைத்தேர்தலில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுடன் சேர்த்து, உத்தரப் பிரதேசம், அ... மேலும் பார்க்க

குஜராத் இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸின் குலாப்சிங்!

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குலாப்சிங் பிரபாய் ராஜ்புத் தனது நெருங்கிய போட்டியாளரும், பாஜக வேட்பாளருமான ஸ்வரூப்ஜி தாக்கூரைக் க... மேலும் பார்க்க

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: சமநிலையாக செல்லும் முன்னிலை!

ராஜஸ்தானில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட 7 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ராஜஸ்தானில் 7 தொகுதிகளில் 5 தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலும், ராம்கர் ... மேலும் பார்க்க

வெற்றி உறுதி: மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்திருக்கிறது.மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான மகா யுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்ப... மேலும் பார்க்க