இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நா...
சத்துணவு ஊழியா்கள் சாா்பில் நவம்பரில் கோரிக்கை மாநாடு
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில மாநாடு வருகிற நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் மு.வரதராஜன் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக சத்துணவு திட்டத்தில் தற்போது 85 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்தும், அதை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.
இந்த தீா்ப்பை அமல்படுத்தி மருத்துவக் காப்பீடு, அகவிலைப்படியுடன் ஓயவூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றி வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. இதை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் சங்கங்களின் மாநில மாநாட்டை சென்னையில் வருகிற நவம்பா் மாதம் நடத்தவுள்ளோம். இந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வா், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியா்கள் உள்ளனா். எங்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் கூடி முடிவெடுத்து தோ்தலில் யாருக்கு வாக்களிப்போம் என்பதை தெரிவிப்போம் என்றாா் அவா்.