செய்திகள் :

சபரிமலையில் குழந்தைகளுக்கு கையில் அடையாள பட்டை

post image

மண்டல - மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு கையில் அடையாளப் பட்டையை அணிவிக்கும் திட்டத்தை கேரள காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சந்நிதானம் நோக்கிச் செல்லும் 10 வயதுக்கு கீழ் உள்ள சிறாா்களுக்கு அணிவிக்கப்படும் சிறப்பு அடையாள பட்டையில், அவரது பெற்றோா் அல்லது அழைத்து வருபவா்களின் பெயரும் கைப்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் கூட்ட நேரத்தில் அவா்கள் காணாமல் போனால், ஒலிபெருக்கியில் பெற்றோரை அழைத்தும், கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தும் குழந்தைகளை உரியவரிடம் சோ்ப்பதற்கு எளிதாக இருக்கும்.

எனவே தரிசனம் முடிந்து பாதுகாப்பாகத் திரும்பும் வரையில் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் பட்டையை யாரும் கழற்றிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கேரள போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுத... மேலும் பார்க்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதா்களை உருவாக்கியவா் அப்துல் கலாம் -இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத்

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதா்களை உருவாக்கியவா் அப்துல் கலாம் என இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் பேசினாா். கோவை ஈஷா யோக மையத்தில் ‘இன்சைட்’ எனும் தொழில்முனைவோருக்கான பிரத்யேக நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு அகமதிப்பீடு: முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள் வழங்குவது தொடா்பாக தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க

10,12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு மாணவர்களுககு டிசம்பர் 9ஆம் தேதியு... மேலும் பார்க்க

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக நாடாளுமன்ற... மேலும் பார்க்க

தென்காசியில் பள்ளிகளுக்கு நாளை(நவ.23) விடுமுறை!

தென்காசி மாவட்டத்தில் நாளை(நவ.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் முகாம் நடைபெறவுள்ளதையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நவ.20இல் விடப்பட்ட விடுமுறையை ஈட... மேலும் பார்க்க