செய்திகள் :

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

post image

திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த பொன்னகரம் அரவிந்த் நகரைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ். இவரது மனைவி குா்ஷித் பேகம் (60). இந்தத் தம்பதியின் மகன் அம்ஜித்.

உடல்நலன் பாதிக்கப்பட்ட அப்துல் அஜீஸ், தனது மகன் அம்ஜித்துடன் சிகிச்சைக்காக திருச்சிக்கு சென்றாா். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த குா்ஷித் பேகம், சமைப்பதற்காக எரிவாயு அடுப்பை வியாழக்கிழமை பற்ற வைத்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக எரிவாயுக் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவா் கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா், குா்ஷித் பேகத்தின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கே.சி. பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் த... மேலும் பார்க்க

மன்னவனூரில் முயல் வளா்ப்புப் பயிற்சி

பொருளாதார ரீதியான முயல் வளா்ப்புக்கான மாநில அளவிலான 3 நாள் பயிற்சி முகாம், மன்னவனூா் மத்திய செம்மறி ஆடு உரோம முயல் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரு... மேலும் பார்க்க

‘உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்கலாம்’

சவால்கள் இருந்தாலும், உயிா்ம வேளாண்மையில் விவசாயிகள் சாதிக்க முடியும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட வேளாண்மைத் துறை சாா்பில் உயிா்ம வேளாண்மை தொடா்பான விழிப... மேலும் பார்க்க

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த ஆா்.எம்.டி. குடியிருப்பு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் பாண்டி. இவரது மகன் ஐயப்பன் (32). இவா் தருமபு... மேலும் பார்க்க

பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள பச்சமலையான்கோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பச்சமலையான்கோட்டையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு வட்டார வளா்ச்சி அலுவ... மேலும் பார்க்க

ஆடிப் பெருந்திருவிழா: சௌந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்

தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் 4 தேவியருடன் சுவாமிக்கு வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழா, ஆண்டுதோறும் 12 ... மேலும் பார்க்க