செய்திகள் :

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வு!

post image

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேற்கத்திய தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கத்திய தீவுகள் அணிக்காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல் (வயது 37) ஜமைக்காவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடருடன் ஓய்வுபெறவுள்ளார்.

அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், ரஸலின் ஓய்வு மேற்கத்திய தீவுகள் அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இவர், மேற்கத்திய தீவுகள் அணிக்காக 84 டி20, 56 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஓய்வு தொடர்பாக ரஸல் தெரிவித்ததாவது:

”மேற்கத்திய தீவுகள் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என் வாழ்க்கையில் பெருமைமிக்க சாதனைகளில் ஒன்றாகும். வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நான் சிறுவனாக இருந்தபோது, இந்த நிலைக்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாட விரும்புகிறேன். கரீபிய மண்ணில் இருந்து வரும் அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் அதே வேளையில், எனது சர்வதேச வாழ்க்கையை உயர்வாக முடிக்க விரும்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

பூரணைத் தொடர்ந்து இரண்டு மாதங்களில் ஓய்வுபெறும் இரண்டாவது மேற்கத்திய தீவுகள் அணியின் மூத்த வீரர் ரஸல் ஆவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் போன்ற லீக் தொடர்களில் ரஸல் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

West Indies all-rounder Andre Russell has announced his retirement from international cricket.

இதையும் படிக்க : ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு!

கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன? ரவி சாஸ்திரி பதில்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படுவதற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொட... மேலும் பார்க்க

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், இ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை இனிதான் தொடங்குகிறது: முன்னாள் ஆஸி. கேப்டன்

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்று... மேலும் பார்க்க

டெஸ்ட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கிப் பயணித்து வருகிறார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ... மேலும் பார்க்க

முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

முத்தரப்பு டி20 தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியி... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொட... மேலும் பார்க்க