செய்திகள் :

சாலையில் கிடந்த ரூ.2.50 லட்சம்: உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

post image

கோவை: பொள்ளாச்சி அருகே சாலையோரம் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.2.50 லட்சத்தை போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(25). தனியார் நிறுவன ஊழியரான சந்தோஷ் குமார் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு சென்றுள்ளார்.அப்போது ஜமீன் முத்தூர் தனியார் பள்ளி அருகே சாலையோரம் கேட்பாரற்ற நிலையில் செய்தித்தாளில் சுற்றப்பட்ட நிலையில் ரூ.2.50 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பணத்தை இளைஞர் சந்தோஷ் குமார் பத்திரமாக எடுத்து வந்து, அந்த பகுதியில் உள்ள மேற்கு காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். செய்தித்தாளில் கட்டப்பட்டிருந்தை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.500 கொண்ட 5 கட்டு இருந்தது. அதாவது ரூ.2.50 லட்சம் இருந்தது.

இதையும் படிக்க |அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இதனைத் தொடர்ந்து பணத்தைத் தவறவிட்டவர் குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பணத்தைத் தவறவிட்டவர் காளிபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் சந்தோஷ் குமார் மூலம் ரூ.2.50 லட்சத்தை தவறவிட்ட காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி என்பவரிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி அடுத்த கிராமப் பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், சாலையில் கிடந்த பணத்தை நோ்மையாக போலீசார் மூலம் உரியவரிடம் ஒப்படைத்தது அந்த பகுதி மக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கீழே கிடந்த பணத்தை நோ்மையாக ஒப்படைத்த சந்தோஷ் குமாருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியாளர் என கூறி தொண்டு நிறுவனம் தொடங்கப்படுவதாகவும், அதில் உங்கள் பிள்ளையின் அனைத்து படிப்பு செலவுகளையும் தாங்களே பார்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.60 ஆயிரத்தை ஏமாற்றி ஆள் ம... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை திருப்பூர் சேமலைக் கவுண்டம்பாளையம் சம்பவத்தை மேற்கொள் காட்டி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சன... மேலும் பார்க்க

தொடர் அமளி: மாநிலங்களவை டிச. 2 வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாக டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை தமிழக-புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை காலை(நவ.30) தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையே தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வ... மேலும் பார்க்க

சுமத்ரா தீவில் நிலச்சரிவு: சுற்றுலாப் பயணிகள் 9 பேர் பலி

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலாப் பேருந்தில் இருந்து மேலும் இரண்டு உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியான பிளடி பெக்கர், பிரதர்!

பிளடி பெக்கர் மற்றும் பிரதர் ஆகிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.கவின் நடிப்பில் வெளியானபிளடி பெக்கர்பெக்கர் திரைப்படம்சிம்பிளி செளத்ஓடிடியில் காணக் கிடைகிறது.இயக்குநர் சிவபாலன் முத்துகுமார் எ... மேலும் பார்க்க