செய்திகள் :

சாவர்க்கர் பேச்சு.. ராகுல் - ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே காரசார வாதம்

post image

புது தில்லி: மக்களவையில் இன்று, அரசமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சிவசேனை எம்.பி. ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அரசமைப்புச் சட்டம் குறித்தும், சாவர்க்கர் குறித்தும் ராகுல் பேசி, பாஜகவை கடுமையாகத் தாக்கியிருந்தார்.

மக்களவையில் ராகுல் பேசுகையில், அரசமைப்பு மற்றும் இந்தியர்கள் பற்றி மாற்று கருத்து கொண்டிருப்பதை சாவர்க்கரே எழுதியிருந்தார். வேதத்திற்கு அடுத்ததாக வணங்க வேண்டியது மனுஸ்மிருதி என்று சாவர்க்கர் கூறியிருந்தார். உங்கள் தலைவரின் வார்த்தையை நீங்கள் (பாஜக) ஆதரிக்கிறீர்களா? என்று ஆளுங்கட்சி எம்.பி.க்களைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.

தற்போது அரசமைப்பைப் பாதுப்போம் என்று நீங்கள் சொல்வது சாவர்க்கரை அவமதிப்பதாகும். நாட்டில் உள்ள பல்வேறு தலைவர்களை புகழ தயங்குகிறது பாஜக. பெரியார், அம்பேத்கர், காந்தி என அனைத்து தலைவர்களையும் நாங்கள் வணங்குகிறோம். அரசமைப்பைப் பற்றி சாவர்க்கர் கூறுகையில், இந்திய அரசமைப்பு என்பது, இந்தியர்களைப் பற்றிய எதையும் கொண்டிருக்காத ஒன்று என்றும் மனுஸ்மிருதி என்பது வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய ஒன்றாகும், மேலும் இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாசாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று சாவர்க்கர் கூறியதாக ராகுல் பேசினார்.

மேலும், ஏகலைவனின் கதையைச் சொல்லி, எவ்வாறு ஏகலைவனின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதோ அதுபோல மத்திய அரசு, நாட்டின் பல்வேறு துறைகளை ஒரு சில தொழிலதிபர்களுக்குக் கொடுத்துவிட்டு அனைத்து இளைஞர்களின் கட்டைவிரலையும் துண்டித்துவிட்டது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த கல்யாண் தொகுதி எம்.பி. ஸ்ரீகாந்த் பேசுகையில், அவசரநிலை காலத்தில் அம்பேத்கர் மற்றும் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வி.டி. சாவர்க்கரை புகழ்ந்து எழுதிய கடிதத்தையும் அவர் மேற்கோள்காட்டிப் பேசினார்.

நாட்டின் வீரம் மிக்க மகன் என்று இந்திரா காந்தி, சாவர்க்கர் குறித்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததையும் ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டிப் பேசினார்.

மேலும், சவார்க்கரைப் புகழ்ந்து பேசியதன் மூலம், உங்கள் பாட்டி, இந்திரா காந்தி, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவரா? இந்த நாட்டுக்காக அவர் செய்த தியாகத்துக்குத்தான் அவரைப் பெருமைகொள்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

ஐயப்ப பக்தா்களுக்காக விஜயவாடா, குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்

சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் குண்டூரிலிருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

போலி அமலாக்கத் துறை சோதனை நடத்தி பிடிபட்டவா் ஆம் ஆத்மிக்கு நிதியுதவி: குஜராத் காவல் துறை குற்றச்சாட்டு

குஜராத்தில் போலி அமலாக்கத் துறை சோதனை நடத்தி பிடிபட்ட முக்கிய நபா், ஆம் ஆத்மி கட்சிக்கு நிதியுதவி அளித்து வந்ததாக காவல் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக மாநில காவல் துறை தெரிவித்ததாவது: அண்மையில... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி

மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு ரகசிய தகவலின் பேரில... மேலும் பார்க்க

அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் விமர்சித்துள்ளார். மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், "சுதந்திரத்த... மேலும் பார்க்க

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ வைரல்

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபரின் விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், கர்நாடக மாநிலம், பெங்களூரு ரயிலுக்குள் மாற்றுத்திறனாளி ஒருவர் பயணியிடம் பிச்சை எடுக்கிறார். பின... மேலும் பார்க்க

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

அரசமைப்பு சாசனம் குறித்த விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, ``நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையி... மேலும் பார்க்க