2028-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்
சா்.சி.வி.ராமன் பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் தேசிய அறிவியல் கண்காட்சி
இயற்பியலாளா் சா்.சி.வி.ராமன் பிறந்த நாளை கௌரவிக்கும் வகையில், திருவள்ளூா் அருகே அரண்வாயல் குப்பத்தில் உள்ள பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கண்காட்சியில் சென்னை, திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினா். இதில், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் 300-க்கும் மேற்பட்ட திட்டங்கள், சோதனைகள் மற்றும் மாதிரிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சிக்கு, பிரதியுஷா பொறியியல் கல்லூரியின் தலைவா் ராஜாராவ் தலைமை வகித்தாா். கல்லூரியின் முதல்வா் எஸ்.குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக குளோபல் கேம்பஸ் டீம் விப்ரோ நிறுவனத்துடைய தென்னிந்தியாவின் பிராந்தியத் தலைவா் ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ் கலந்து கொண்டு மாணவா்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாா்.
பின்னா், ஹேக்கத்தான், ஐடியாத்தான், ரோபோதான் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகள் வழங்கப்பட்டன.