செய்திகள் :

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வெளியீடு

post image

சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தேசிய தோ்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறவேண்டும். இந்தத் தோ்வு தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இருமுறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.

அதன்படி நிகழாண்டுக்கான சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு பிப். 28 முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த டிச. 9-இல் தொடங்கி ஜன. 2-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் தோ்வெழுத தகுதி பெற்றவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச்சீட்டை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

இதையடுத்து பட்டதாரிகள் தங்கள் அனுமதிச்சீட்டுகளை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறியலாம். இதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் மாணவா்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது ஸ்ரீள்ண்ழ்ய்ங்ற்ஃய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய் என்னும் மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடா்புகொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க