செய்திகள் :

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

post image

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்.

இதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர் விஜய், " ஒரு சில நிகழ்ச்சி மட்டும்தான் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். அந்தவகையில் இது என் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி. நம் வீட்டில் அம்மா, அக்கா, பாட்டி என ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பும் முக்கியம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவோம். பெண்களின் பாதுகாப்பிற்கு போதை ஒழிப்பு முக்கியம். போதையை அகற்ற வேண்டும்.

பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விட்டதால் தான் போதைப்பொருள் நடமாட்டம் பரவி விட்டது. பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன். குற்றவாளிகளுக்கு விரைவாகத் தண்டனை பெற்று தர வேண்டும். பெண்களுக்கான கண்ணியம் உச்சபட்ச முன்னுரிமை.

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நாட்டில் முதலாவதாக ட்ரோன்கள் வாயிலாக ரோந்து நடைபெற இருக்கிறது. பெண்களும், குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில் தான் ஒரு அரசின் வெற்றி உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தனிமனித ஒழுக்கம் சரியாக இருந்தால் நம் சமூகம் மாறும். பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த சிங்கப்பெண் அதிரடி படைத் திட்டம் தொடங்க காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி" என்று பேசியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி இல்லத்திற்குள் நுழைந்து சிஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை; மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கொல்கத்தா இல்லத்தில், மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்... மேலும் பார்க்க

மம்தாவுக்குப் பின்னடைவு - சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசியல் | Timeline

மூன்றுமுறை முதல்வர் பதவியில் இருந்த மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றாத் தேர்தலுக்குப் பிறகு பெரும் துயரத்துக்கு ஆட்பட்டிருக்கிறார். ஆட்சி, அதிகாரம், கட்சி, தொண்டர்கள் என பரபரப்பாக இயங்கி, பவர் சென்டராக இர... மேலும் பார்க்க

அனல் பறந்த ஆலோசனைக் கூட்டம்: காங்கிரஸை வறுத்தெடுத்த மாநிலக் கட்சிகள்; 'அன்போடு' ராகுல் காந்தி பதில்!

டெல்லியில் ஜூன் 8 (நேற்று) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், பல மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருக்கின்றன. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் 'கூட்டணியின் செய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை... மேலும் பார்க்க

DAC: OMR-ல் சாட்டிலைட் அலுவலகம் தொடக்கம்! சென்னையின் முதல் English-Themed வசிப்பிட திட்டம் அறிமுகம்

சென்னையின் மிகவேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் IT தளமான பழைய மகாபலிபுரம் சாலையில் (OMR), 'DAC டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தனது புதிய சாட்டிலைட் அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.இந்த திறப்பு... மேலும் பார்க்க