சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு சிறப்பு பேருந்து இயக்கம்
சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே நவ.24 முதல் நவ.28-ஆம் தேதி வரை கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும்.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார
ரயில்கள் நவ.24 முதல் நவ.28-ஆம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக, சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேற்கண்ட தினங்களில், அந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் நலன் கருதி சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே கூடுதலாக 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கென சிறப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, பேருந்து இயக்கத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.