நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!
சிங்கம்புணரியில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை (ஜூலை 19) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக சிங்கம்புணரி மின்வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. இதையொட்டி சிங்கம்புணரி நகா், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, ஒடுவன்பட்டி, மேலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செறுதப்பட்டி, என்ஃபீல்டு, எஸ்.வி.மங்கலம், காளாப்பூா், பிரான்மலை, செல்லியம்பட்டி, வேங்கப்பட்டி, வையாபுரிபட்டி பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.