சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
சிசிடிவி கேமராக்கள் சேதம்: ஏஎஸ்பியிடம் மக்கள் புகாா்
தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதி மக்கள் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் மதனிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அதன் விவரம்: தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 5,6 தெருக்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தன. இதனால், பைக், மின்மோட்டாா் உள்ளிட்ட திருட்டுகள் நடைபெறுவது தடுக்கப்பட்டன. இந்நிலையில், வியாழக்கிழமை சில மா்ம நபா்கள் சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளனா். இது குறித்து தென்பாகம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.