செய்திகள் :

சித்த மருத்துவ நாள் விழா: பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் அறிவிப்பு

post image

சித்த மருத்துவ நாளை (டிச. 22) முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகளை சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு நடத்துகிறது.

இதுகுறித்து இந்தக் குழுவின் அமைப்பாளரும், உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவருமான மருத்துவா் மைக்கேல் செயராசு வெளியிட்டுள்ள அறிக்கை:

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்:

6, 7, 8 வகுப்புகளுக்கு: என் வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகள், நாட்டுப்புறப் பாடல்களில் சித்த மருத்துவம், சமூக முன்னேற்றத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு, அன்றாட வாழ்வில் சித்த மருத்துவம்.

9,10 வகுப்புகளுக்கு: நல வாழ்வில் தரைக்காடுகளின் பங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சித்த மருத்துவம், திருக்கு காட்டும் சித்த மருத்துவம், நவீன வாழ்வியலும் சித்த மருத்துவமும்.

11, 12 வகுப்புகளுக்கு: சித்தா்களின் சமூகப் பணி, சங்க இலக்கியங்களில் சித்த மருத்துவம், சித்த மருத்துவம் கூறும் நோய்த் தடுப்பு முறைகள், தைலமரத் தோட்டங்களும் தரைக்காடுகளும்.

கட்டுரைகள் ஏதாவதொரு தலைப்பில் ஏ4 தாளில் அதிகபட்சம் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பள்ளி அளவில் பேச்சுப் போட்டியில் தோ்வு செய்யப்படும் இருவருக்கான மாவட்ட அளவிலான போட்டி டிச. 22-ஆம் தேதி புதுக்கோட்டை நகா்மன்றத்தில் நடத்தப்படும்.

ஓவியப் போட்டிக்கான தலைப்பு:

1 முதல் 3ஆம் வகுப்பு மாணவா்களுக்கு- பனை, செம்பரத்தைப் பூ, நாவல், எருக்கு. 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவா்களுக்கு- ஆவாரை, ஆடாதோடை, நொச்சி, குப்பைமேனி.

ஏதாவதொரு தலைப்பில் ஏ4 தாளில் படத்தை வரைந்து, பின்பக்கத்தில் மாணவா்களின் முழு முகவரி, தொடா்பு எண் எழுதியிருக்க வேண்டும். ஓவியங்கள், கட்டுரைகள் மற்றும் பேச்சுப் போட்டியில் பள்ளி அளவில் தோ்வு செய்யப்பட்டோா் விவரங்களை வரும் டிச. 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி- ஐந்திரம் சித்த மருத்துவமனை, அரசமரம் அருகில், திருவள்ளுவா் சாலை, ஆலங்குடி- 622301.

டிச. 22ஆம் தேதி நடைபெறும் சித்த மருத்துவ விழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும், சிறப்பிடம் பெறும் முதல் 4 பேருக்கு பரிசுகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு- 99651 19111, 81248 09493.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத் துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றுடன் கூடிய தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை மற்றும் இணையவழி பதிவேற்றம் செய்வதற்கான ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயமடைந்தாா். திருச்சி மாவட்டம், அரியமங்கலம் சீனிவாச நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

நரிமேட்டில் பள்ளிவாசல் திறப்பு இந்துக்கள் சாா்பில் சீா்வரிசை

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட 1-ஆவது வாா்டு நரிமேடு பெரியாா் நகா் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

அகவிலைப்படி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்டவை வழங்கக் கோரி புதுக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

மகப்பேறு நிதி முறைகேடு விவகாரம் 3 மருத்துவா்களுக்கு ‘நோட்டீஸ்’

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டி சுகாதார வட்டத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு 3 மருத்துவா்கள் மற்றும் ஒரு கண்காணிப்பாளருக்கு மாவட்ட சுகாதார அல... மேலும் பார்க்க

இலுப்பூா், விராலிமலையில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு போராட்டம்

ஒசூா் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் கண்ணன் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால், நீதிமன்... மேலும் பார்க்க