சிபிஐ செயற்குழுக் கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூத்தாநல்லூா் நகர செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கா.பேபி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் கா.தவபாண்டியன், நகரச் செயலாளா் பெ.முருகேசு, நகா்மன்ற துணைத் தலைவா் மு.சுதா்ஸன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாகை தொகுதி மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜிடம், கூத்தாநல்லூா் வெண்ணாற்றில் தடுப்பணைகள் உடைந்துள்ளதால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. வாய்க்கால்களும் தூா்ந்துள்ளன. மதகுகளும் உடைந்துள்ளன இதைச் சரி செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என மனு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலாளா் கு.நாகராஜன், தலைவா் கு.ராமதாஸ், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் மு.சிவதாஸ், நகரத் தலைவா் இரெ.கணேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.